காஞ்சிபுரத்தில் லட்சுமி குளோபல் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம், ஜன.21-
காஞ்சிபுரம் லட்சுமி குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் சனிக்கிழமை சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் லட்சுமி குளோபல் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு பள்ளியின் முதல்வர் ஆர்.காயத்ரி அன்பரசி தலைமை வகித்தார்.துணை முதல்வர் பி.காமாட்சி முன்னிலை வகித்தார்.
காஞ்சிபுரம் ஊட்டச் சத்து நிபுணர் நிஷாப்பிரியா பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விபத்துக்களின் போது முதலுதவி செய்வது எப்படி என்ற தலைப்பில் பேசினார். நிறைவாக நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தலைவர் ஜி.திருவேங்கடம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணியில் மாணவர்கள் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
பேரணி பள்ளியிலிருந்து தொடங்கி ஆட்சியர் அலுவலகம் வழியாக வந்து மீண்டும் பள்ளிக்கு வந்து சேர்ந்தது. ஏற்பாடுகளை லட்சுமி குளோபல் பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments