காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பட்டுச்சேலை கடையில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை... செய்தியாளர்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல ஏ.எஸ்.பாபு சா பட்டுச்சேலை விற்பனை கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். இந்த திடீர் சோதனையால் மற்ற பட்டுச்சேலை கடை உரிமையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சுற்றுலாத்தலமானதும்,பட்டு நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத் தெருவில் பிரபல தனியார் பட்டுச் சேலை விறபனை கடையான ஏ.எஸ்.பாபு சா பட்டுச்சேலை விற்பனை கடை இயங்கி வருகிறது.
இக்கடையில் நாள்தோறும் ஆந்திரா,கர்நாடக, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் சுற்றுலா பயணிகள் என பல ஆயிரக்கணக்கானோர் பட்டுச் சேலைகளை வாங்கி செல்வர்.மேலும் நாள்தோறும் பல கோடிகளுக்கு வர்த்தகம் நடைபெறும் இக்கடையில் அவ்வப்போது வருமான வரித்துறையினரின் சோதனைகளும் நடைபெற்று, பல்வேறு ஆவணங்களை எடுத்து செல்வதுமாக இருக்கும்.
இந்நிலையில் தற்போது தீபாவளி,கிருஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் ஒட்டி இக் கடையில் விற்பனை கலைக்கட்டியுள்ள நிலையில் இன்றைய தினம் இக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
வருமான வரித்துறையினரின் இந்த சோதனையால் கடையில் பட்டுச்சேலை வாங்க வந்தவர்கள் அனைவரும் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மேலும் வீடு கடை உள்ளிட்ட இடங்களில் 10க்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வருமான வரித்துறையினரின் இக் கடையில் சோதனை மேற்கொள்வதை அறிந்து வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து சம்பவ இடத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம், வருமானவரித்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை குண்டு கட்டாக தடுத்து நிறுத்தி செய்தி சேகரிக்க கூடாது என கூறினர்.
செய்தியாளர்கள் கடையின் நுழைவு வாயில் முன்பு இருந்த வீடியோ பதிவு செய்வதை கூட செய்யக் கூடாது, செய்தியை எடுக்க கூடாது என செய்தியாளர்களின் சுதந்தரத்தையும்,கடமையையும் செய்ய கூடாது என்ற நோக்கில் தொடர்ந்து செயல்பட்டதால் செய்தியாளர்களுக்கும், வருமானவரித் துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
வருமானவரித்துறையினரின் இந்த திடீர் சோதனையால் மற்ற பட்டுச்சேலை கடை உரிமையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




No comments
Thank you for your comments