ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி...
தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு சாலை விபத்துகளில் பொதுமக்கள் உடல் உறுப்பு மற்றும் உயிரிழப்பு என வாகனங்கள் எண்ணிக்கைகளால் அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டு வருவதை தொடர்ந்து சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.
குறிப்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மேலும் அவர்களுடன் இணைந்து தன்னார்வர் நிறுவனங்களும் பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு செய்வது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு வாரம் தூய்மை வார விழா 2023 என்ற தலைப்பின் தமிழக முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நேற்று முதல் சாலை பாதுகாப்பு வாரம் துவங்கியுள்ளது
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம்,
வழக்கமான சாலை பாதுகாப்பு வாரம் போல் இந்த ஆண்டு விழிப்புணர்வுகள் இருக்காது எனவும் , நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை விதிகள் மனதில் பதியும் அளவிற்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவித்து இருந்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவலர் அரங்கத்தில் நிறைவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் ஓட்டி அணிந்து சென்றதால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.
கடந்த 11ம் தேதி துவங்கிய சாலை பாதுகாப்பு வாரம் 17 உடன் நிறைவடைந்தது. நாள்தோறும் பல்வேறு தலைப்புகளின் கீழ் வாகன ஓட்டிகளுக்கும், வாகன ஓட்டும் உரிமம் பெற வந்தவர்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இனிவரும் காலங்களில் அவ்வப்போது காஞ்சிபுரம் மாநகரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன் தெரிவித்தார்.

.jpg)

.jpg)

No comments
Thank you for your comments