Breaking News

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்

காஞ்சிபுரம், ஜன.22-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சார்பில் ஒலிமுகம்மது பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தன்னார்வ ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தன்னார்வ ரத்ததான முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு மாநில செயலாளர்கள் அல்அமீன் தலைமை வகித்தார். மற்றொரு மாநில செயலாளர் யாசர் முன்னிலை வகித்தார். 

தன்னார்வ ரத்ததான முகாமை காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். முகாமில் காஞ்சிபுரம் நகர் சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வர இருக்கும் குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக முகாமில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்வில் ரத்ததானம் செய்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது. மாநிலச் செயலாளர் அல்அமீன் பேசுகையில் கடந்த ஒராண்டில் மட்டும் 1036 யூனிட்டுகள் ரத்ததானம் செய்திருப்பதாக குறிப்பிட்டார். முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

 

No comments

Thank you for your comments