Breaking News

பாரிவேட்டை திருவிழாவில் கரகாட்டம் ஆடிய பெண்ணிடம் குடிமகன் அநாகரிக செயல்... வீடியோ வைரல்

ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் ஆலயத்தில் நடைபெற்ற காணும் பொங்கல் பாரி வேட்டை திருவிழா நடைபெற்றது.

கரகாட்டம் ஆடிய பெண்ணை வாலிபர் ஒருவர் குடிபோதையில் கட்டிப்பிடித்து கீழே தள்ளி விட்ட அநாகரிக செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் ஊர்வலமாக வந்து வி ஆர் பி சத்திரம் பகுதியில் காணும் பொங்கல் பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது.  அப்பொழுது ஆதி கேச பெருமாள் குதிரையில் பாரிவேட்டை செய்தார்.

 இந்த நிகழ்ச்சியின் போது மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்டு கரகாட்ட ம் நடைபெற்றது.

அப்பொழுது கரகாட்டம் ஆடிக் கொண்டிருந்த பெண்ணை குடிபோதையில் வாலிபர் ஒருவர் வலுக்கட்டாயமாக கட்டி பிடித்து இழுத்து கீழே தள்ளினார்.

அப்பொழுது கீழே விழுந்த கரகாட்ட பெண்ணால் எழுந்திருக்க முடியாமல் திணறினார் மேலும் வயிற்று பிழைப்புக்காக கரகாட்டம் ஆடுகிற பெண்ணை குடிபோதையில் வாலிபர் ஒருவர் கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments