காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட வி ஏ ஒ கைது
காஞ்சிபுரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் விஏஓ வாக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளாவூர் பகுதியைச் சார்ந்த சிவரஞ்சனி என்பவருடன் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
இந்நிலையில் சிவரஞ்சனி தன்னை திருமணம் செய்து கொள்ள ராஜேஷ் இடம் கேட்டபோது ஜாதகம் சரி இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்திருக்கிறார்.
இதனால் சிவரஞ்சனி மன உளைச்சலலில் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சிவரஞ்சனியின் பெற்றோர் சமாதானபடுத்தி வேறொருவரோடு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் வி ஏ ஒ ராஜேஷ் சிவரஞ்சனி இருவரும் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருக்கிறார்.
இது தொடர்பாக சிவரஞ்சனி அளித்த புகாரின் அடிப்படையில் வல்லக்கோட்டை பகுதியை சேர்ந்த வி ஏ ஓ கைது செய்யப்பட்டு சாலவாக்கம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments
Thank you for your comments