Breaking News

காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியின் ஆணையின்படி முன்னாள் மத்திய அமைச்சர் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கே.வீ. தங்கபாலுவின் அறிவுறுத்தலின்படி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ. ஆர்.பி.பாஸ்கர் அவர்களின் ஆலோசனை படியும்,தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் உரையில் தமிழ்நாட்டு தலைவர்களின் பெயர்களை தவிர்த்தும், தமிழ்நாடு பெயரை தவிர்த்தும் நிகழ்த்திய உரையை  கண்டித்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுநரை கண்டித்து சேலம் ஜங்ஷன் போஸ்ட் ஆபீஸ் மற்றும் ஆட்சியர் அலுவலகம், தாதகாப்பட்டி கேட் முன்பும் சேலம் மாநகர பொதுச்செயலாளர் தாரை இராஜகணபதி தலைமையிலும் சேலம் மாவட்ட வர்த்தக பிரிவின் தலைவர் எம்.டி சுப்பிரமணியம் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பச்சப்பட்டி பழனிசாமி, கொண்டலாம்பட்டி மண்டல தலைவர் நடராஜ், டிவிஷன் தலைவர் எல்.ஐ.சி சுந்தர்ராஜன், வழக்கறிஞர் கார்த்திக், சசிகுமார், விஜயன், சாந்தமூர்த்தி, நிஷார், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

முதல்வர் ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் கொடுத்த சவுக்கு சங்கர்

No comments

Thank you for your comments