காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பந்தல்கால் நடும் விழா
காஞ்சிபுரம் :
மாசி மாத பிரமோற்சவத்தையொட்டி முதற்கட்டமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசிமாத பிரமோத்சவம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு வரும் பிப்.24 ஆம் தேதி விநாயகர் வீதியுலா, சண்டி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தியுடன் விழா தொடங்குகிறது.
மறுநாள் 25 ஆம் தேதி அதிகாலையில் திருவிழா கொடியேற்றம் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய தினமே யாகசாலை பூஜைகளும் தொடங்குகின்றன. விழாவினையொட்டி தினசரி காலை, மாலை இரவு அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வரவுள்ளார்.
பிப்ரவரி 27 ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா வருகிறார்.மார்ச்.5 ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும்,மறுநாள் 6 ஆம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
விழாவின் தொடக்கமாக வியாழக்கிழமை திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர், மணியக்காரர் சூரியநாராயணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
.jpg)
No comments
Thank you for your comments