அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து .... 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம்... பெரும் பரபரப்பு
விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள ராஜா வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேசேப்பாக்கம் கிராமத்திலிருந்து விருத்தாசலம் பணிமனை 1சேர்ந்த தடம்எண் 22 அரசு நகர பேருந்து இன்று காலை வேப்பூர் அருகில் உள்ள சேப்பாக்கம் கிராமத்திலிருந்து நல்லூர் வழியாக விருத்தாசலம் நோக்கி பயணிகளை ஏற்றுக் கொண்டுவந்தபோது
கோமங்கலம் கிராமபேருந்து நிறுத்தத்தின் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த டாட்டா ஏஸ் வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக பேருந்தின் ஓட்டுநர் சரவணன் சாலையின் ஓரத்தில் ஒதுக்கிய போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய அரசு பேருந்து ராஜாவாய்க்காலில் கவிழ்ந்தது
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விருத்தாசலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில்விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தீயணைப்பு துறையினர்பேருந்தின் உள்ளே மாட்டிக் கொண்ட 50க்கும் மேற்பட்ட பயணிகளை பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்து மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்து அங்கு காய முற்றவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.




No comments
Thank you for your comments