ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான ரூ.35லட்சம் மதிப்புள்ள BOLERO XUV ரக 3காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான ரூ.35லட்சம் மதிப்புள்ள BOLERO XUV ரக 3காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். மணிமங்கலம் போலீசார் விசாரணை..
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துவருபவர் தமிழ் அமுதன்.இவர் திமுக கட்சியை சேர்ந்தவர்.மேலும் இவரது மனைவி மலர்விழி ஒன்றிய குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இவர் BOLERO XUV ரக மூன்று கார்கள் வாங்கி தனது வீட்டின் அருகிலுள்ள கோவிலின் அருகே அந்த கார்க்ளை நிறுத்தியுள்ளார்.
இந்த கார்களானது தொழிற்சாலைகளில் வாடிகைக்கு விட பயன்படுத்த வாங்கப்பட்ட அந்த புதிய கார்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.
இதில் ஒரு கார் முற்றிலும் தீயில் எரிந்து சேதமாகியிருக்கிறது.மேலும் 2கார்கள் டயர் உள்ளிட சில கார்களின் பாகங்கள் எரிந்து சேதமாகியிருக்கிறது.
இது குறித்து அறிந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காருக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் யார், முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments
Thank you for your comments