Breaking News

வருட பிறப்பு 2023... காஞ்சிபுரம் கோவில்களில் குவிந்து வரும் பக்தர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்: 

2022 ஆம் ஆண்டு முடிந்து 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் தொடங்கியதை ஒட்டி கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் குவிந்து வருகின்றனர்.


காலை முதலே புத்தாடை அணிந்து தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் காலை முதலே கோவில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருப்பதால் கோவில் வளாகங்கள் முழுவதும்  களைகட்ட தொடங்கி உள்ளது.

காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

No comments

Thank you for your comments