ஜனவரி 1, 1818 ஆம் ஆண்டு பீமா கோரோகான் போரில் உயிர் நீத்த 40-தலித் வீரர்களுக்கு வீரவணக்கம்
விருத்தாசலத்தில் தலித் அமைப்புகளின் தலைவர்கள் சார்பாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஜனவரி 1, 1818 ஆம் ஆண்டு பீமா கோரோகான் போரில் உயிர் நீத்த 40-தலித் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் தலித் அமைப்புகளின் தலைவர்கள் சார்பாக ஜனவரி 1, 1818 ஆம் ஆண்டு உலகத்தையே உலுக்கிய பீமா கோரோகன் போரில் உயர் சாதிவெறி கும்பளால் படு கொலை செய்யப்பட்ட 40 தலித் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி கோரோ கான் நினைவிட படத்திற்க்கு மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்
பின்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கை வயல் கிராமத்தில் தலித் பகுதியில் உள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மனிதமலத்தை கலந்து அந்தகுடிநீரை குடித்து பாதிப்படைந்த தலித் மக்களுக்கு வன்கொடுமை சட்டத்தின் படிஉரிய நிவாரணம் வழங்க கோரியும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த மனநலம் குன்றிய சாதி வெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது
இதில் கா.திருவள்ளுவன், மக்கள் குடியரசு கட்சி மாநில தலைவர் ஆதிதலித் அறக்கட்டளை தலைவர் திருமாறன், இந்திய குடியரசு கட்சியின் மாநில துணை பொது செயலாளர் மங்காபிள்ளை, சேப்பாக்கம் பிரகாஷ், வழக்கறிஞர் காந்தி, அர்ஜுனன், மணிகண்டன், சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான தலித் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
பின்பு மக்கள் குடியரசு கட்சியின் மாநில தலைவர் கா. திருவள்ளுவன் செய்தியாளர்களிடம் கூறுகிறபோது
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தற்போது வரை தலித் மக்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் எனவே டாக்டர் அம்பேத்கர் கூறியது போல நான் பிறக்கும்போது இந்துவாக பிறந்தேன் இறக்கும்போது இந்துவாக இறக்க மாட்டேன் என்று கூறினார் அதனை சிறிது மாற்றி கூறுகிறோம் பிறக்கின்றபோது இந்துவாக பிறந்தோம் இறக்கின்ற போது பௌத்த பூமியில் தான் இறப்போம் என நாங்கள் கூறத் தொடங்கி இருக்கிறோம் ஏனெனில் எத்தனை அரசாங்கங்கள் வந்தாலும் தலித் மக்களுக்கு சுதந்திரம் என்பது கிடைக்கவில்லை மத்தியில் வேண்டுமானால் இந்து அரசுடன் கூட்டாட்சியில் சேருகிறோம்
தலித் மக்களுக்கு என்று இந்தியா முழுவதும் தனி மாநிலம், தனி ஆட்சி, தனி சட்டமன்றம், தனி அதிகாரத்தை தர வேண்டும், அப்போதுதான் தலித் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும் எனவே இந்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் எங்களுக்கு தனி மாநிலத்தை ஒதுக்கிட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.


No comments
Thank you for your comments