காஞ்சி காமாட்சி கோயிலில் மகா சண்டி ஹோமம்
காஞ்சிபுரம்,டிச.27
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தின் சார்பில் மகா சண்டி ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
![]() |
| சிறப்பு அலங்காரத்தில் துர்க்கையம்மன் |
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 5 வது ஆண்டாக 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரால் ஹோமங்களில் தலையானதான சண்டி ஹோமம் நடைபெற்றது. மகா சண்டி ஹோமத்தை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் தொடங்கின.
பின்னர் கோ.பூஜை, மகா கணபதி பூஜை,விக்னேசுவர பூஜை,சுகாசினி பூஜை,தம்பதியர் பூஜை,சுமங்கலி பூஜை ஆகியன நடைபெற்றன. பின்னர் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.
10க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் சண்டி ஹோமத்தை நடத்தினர். பூர்ணாகுதி தீபாராதனளும்,சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. பின்னர் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. மகா சண்டி ஹோமத்தை முன்னிட்டு மூலவர் காமாட்சி அம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
![]() |
| காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் வேதவிற்பன்னர்களால் நடத்தப்பட்ட மகா சண்டி ஹோமம் |
ஹோமம் நடைபெற்ற இடத்தில் துர்க்கை அம்மன்,சரஸ்வதி,கங்கையம்மன் உள்ளிட்ட அலங்காரங்களில் அம்மன் காட்சி தருவது போலவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் 24மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்க மாநிலத் தலைவர் ஆர்.நடராஜன், தொழிலதிபர்கள் பெங்களூர் டி.பாலகிருஷ்ணன், திருப்பூர் எஸ்.கண்ணன், வைரம் குமார்,வி.சிவானந்தம், கல்யாண காமாட்சி அறக்கட்டளையின் பொருளாளர் எஸ்.பரமசிவம், செயலாளர் கே.வி.கிருஷ்ணன் உட்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


No comments
Thank you for your comments