Breaking News

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு பாடல் பாடி அசத்திய காவலர்

விருத்தாசலத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு மழைகாலங்களில் மற்றும் புயல் வரும்போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பாடல் பாடி அசத்தியய காவலர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் போக்குவரத்து காவல்துறை சார்பில் தமிழக பொதுமக்களின் நலன் கருதி தலைமை காவலர் சிவபெருமான், மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளை பற்றி விழிப்புணர்வு பாடல் ஒன்றை இவரே இயற்றி பாடியுள்ளார். 

அந்தப் பாடலில் மழை பெய்யும் போதும், இடி இடிக்கும் போதும் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம், இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டாம், இடி இடிக்கையில் மரத்தடியில் ஒதுங்கி நிற்க வேண்டாம் மற்றும் மின்சார சாதனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் போன்ற பாதுகாப்பு முறைகளை தன்னுடைய விழிப்புணர்வு பாடல் மூலம் பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு எளிதாக புரியும் வகையில் பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விருத்தாசலம் காவல்துறை மற்றும் தலைமை காவலர் சிவபெருமான் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments