வேப்பூரில் புதிய ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறப்பு விழா... தலித் மக்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு... கூட்டத்தில் சலசலப்பு...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பகுதியில் நபார்டு WIF திட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டிடங்கள் தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் புதிய திறப்பு விழா தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (துணை இயக்குனர் விவசாயம்) ஜெயக்குமார், கடலூர் விற்பனைக்குழு தனி அலுவலர்மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் பூங்கோதை, கடலூர் விற்பனை குழு செயலாளர் விஜயா, விற்பனை கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கடலூர் விற்பனைக்குழு அரசு அலுவலர்கள் பொதுமக்கள் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் புறக்கணிக்கப்படுவதாகவும் இந்த திறப்பு விழாவில் இங்குஒழுங்குமுறை விற்பனை கூடம் வருவதற்கு பாடுபட்டவர்கள் அதிமுக ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறினார் அவர்களுக்கே அழைப்பிதழ் கொடுக்காமல் அவசரம் அவசரமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்,
மேலும் சம்மந்தமே இல்லாதவர்கள் கெளரவிக்கபடுவது வேதனை அளிப்பாதகவும் கூட்டத்தின் நடுவில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது மேடையில் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் எதுவும் தெரியாததுபோல் மௌனமாக இருந்துள்ளார்
இதனை பார்த்த பொதுமக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே இதுபோன்று மௌனம் காத்தால் மேலும் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனையுடன் தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments