Breaking News

ஆவடியில் ஓடும் பேருந்தில் அட்டகாசம் செய்யும் மாணவர்கள்.. பொதுமக்கள் அச்சம்

ஆவடி:

திருவள்ளூர் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆவடியில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இந்த பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் அட்டகாசம் செய்துவருதாக புகார் எழுந்துள்ளது .

இதை தொடர்ந்து தடம் எண் எஸ் 52 இந்த பேருந்து திருவேற்காட்டில் இருந்து ஆவடி செல்லும் பாபா கோவில் அருகில் யாதவர் தெரு நிறுத்தத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கியபடி செல்வது மட்டுமில்லாமல் பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு அதிக அளவில் தொல்லை கொடுத்து வருவதாகவும் ஓடும் பேருந்தில் செல்லும் பொழுது சாலையில் காலணிகளை தேய்த்து வருவதாலும் ஒருவர் ஒருவர் தகாத வார்த்தைகள் பேசிக் கொள்வதாலும் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர் 

அது மட்டும் இல்லாமல் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர் 


இதில் முக்கியமாக அரசு பள்ளியில் படிக்கும் பூங்காவனம் இசைச்செல்வன் இவர்கள் அதிக தொந்தரவு தருவதாக பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கேட்டுக் கொண்டன

No comments

Thank you for your comments