Breaking News

ஸ்ரீ தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா

 காஞ்சிபுரம் ஸ்ரீ  தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.


காஞ்சிபுரம் ஸ்ரீ தண்டபாணி ஓரிண்டல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலையரங்கத்தில் குழந்தைகள் தின விழா மற்றும் கட்டுரைப் போட்டி. பேச்சுப்போட்டி. எழுத்துப்போட்டி. உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பங்கு பெற்ற மாணவ. மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

பள்ளியின் தாளாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் உஷாராணி வரவேற்புரை ஆற்றினார் இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் அபராஜிதா கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் கே. குமார். ஏகாம்பரபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்பாக அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கி பாராட்டினார்கள். 

மேலும் பரிசுத்தொகை நன்கொடையாக வழங்கிய பள்ளி குழு உறுப்பினர் கண்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது இதில் மாணவ. மாணவிகள். பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் விழாவின் முடிவில் பள்ளிஆசிரியர் விஜயகுமார் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

No comments

Thank you for your comments