Breaking News

மனித உரிமைகளை மீட்டெடுக்கும் விழிப்புணர்வு பேரணி

படப்பையில் பொறியியல் கல்லூரி சார்பாக மணிமங்கலம் உதவி காவல் ஆணையர் தலைமையில் மனித உரிமைகளை மீட்டெடுக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பையில் தானிஷ் அகமது இன்ஜினியரிங் கல்லூரி சார்பாக நாளை சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இன்று பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் மனித உரிமைகளை மீட்டெடுக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இந்த பேரணியில் தனுஷ் அகமது இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த  500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

இந்த பேரணியில் மாணவர்கள் மனித உரிமைகளை குறித்தான பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியை மணிமங்கலம் உதவி காவல் ஆணையர் ரவி தலைமையில் மணிமங்கலம் காவல் ஆய்வாளர் ரஞ்சித் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

படப்பையில் துவங்கி வஞ்சுவாஞ்சேரி வரை சுமார் 5 கிமீ தூரம் நடைபெற்ற பேரணியில் தானிஷ் அகமது கல்லூரி இயக்குனர் முனைவர் பே. பரமசிவம் கல்லூரி முதல்வர் கோ.உமாகௌரி ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments