Breaking News

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஒரகடம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளத்தாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (35).

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் தாம்பரம்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுந்தரேசன் பலியானார்.

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

தகவல் அறிந்து சென்ற ஒரகடம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

No comments

Thank you for your comments