உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறுவு மைய கூட்டரங்கில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை மனுமீது உடனடி நடவடிக்கை எடுத்து வீடு ஒதுக்கீடு ஆணையை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒரு நாள் செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்ட உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, துறைவாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் இன்று முதல் மனுக்கள் பெறப்படுகின்றது.
இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்ககூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் நிதி ஆதாரத்துடன் கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்படும். வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் காலை காஞ்சிபுரத்தில் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.
இன்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கைகளாக மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாயகள் தூர்வரப்பட்டு சரிசெய்ய வேண்டும், மின்கம்பங்களை மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது அதனை சரிசெய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இன்று பெறப்பட்டுள்ளது.
மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரைத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
13.12.2022 அன்று ஆலடி பிள்ளையார் கோவில் தெரு, காஞ்சிபுரம் மாற்றுத்திறனாளியான திருமதி.கோமதி அவர்கள் தனது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் குடியிருப்பு ஒன்று வழங்குமாறு கோரிக்கை மனு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களிடம் அளித்தார்.
அதன்மீது உடனடி நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தால், அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் கீழ்கதிர்பூரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடு ஒன்று வழங்குவதற்குக்கான ஒதுக்கீடு ஆணையை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்கள்.
ரூ.9 இலட்சம் மதிப்புள்ள குட்டியிருப்பிற்கு பயனாளிகள் பங்களிப்பு தொகையாக ரூ.1.50 இலட்சம் கட்டப்படவேண்டும். ஆனால் மாற்றுத்திறனாளியின் வறுமை நிலை கருதி இத்தொகையினை மாவட்ட நிர்வாகம் மூலம் பங்களிப்பு தொகை தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்திற்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.ரா.சுமதி, காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர் திரு.குமரகுருநாதன், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் திரு.தேவேந்திரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments