சாஸ்த்ர சம்ரக்ஷண பாடசாலை ஆரம்ப விழா
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள ஸ்ரீ மஹாஸ்வாமிகள் மணி மண்டபத்தில் ஸ்ரீ குருவார சதஸ் டிரஸ்ட் மற்றும் SSSMM டிரஸ்ட் இணைந்து நடத்தும் சாஸ்த்ர சம்ரக்ஷண பாடசாலை ஆரம்ப விழா நடைபெற்றது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வை மஹாமஹோபாத்யாய பிரம்மஸ்ரீ முல்லைவாசல் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் மற்றும் மஹாமஹோபாத்யாய பிரம்மஸ்ரீ மணி த்ராவிட் சாஸ்திரிகள் தொடங்கி வைத்தனர்.
ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயாவின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஸ்ரீ எஸ் வி ராகவன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
விழாவில் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஸ்ரீ எஸ் வி ராகவன் பேசியதாவது :
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா மிக்க பெருமையுடன் இந்த மாபெரும் தொண்டில் இணைகிறது.
இப்பல்கலைக்கழகமானது பண்டைய கலைகளை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. உதாரணமாக 4 வருட சில்ப சாஸ்த்ர படிப்பானது தகுதியான மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. தங்குமிடம் மற்றும் உணவு நம் பல்கலைகழக வளாகத்திலேயே வழங்கப்படுகிறது.
செழுமையான கலாச்சார மற்றும் வேத கல்வியானது தற்கால கல்வி முறையுடன் இணையும் பொழுது இன்றைய மாணவர்கள் எதிரகாலத்தில் சிறந்த ஆளுமைகளாக உருவாக்கப்படுகிறார்கள்.
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
வேத பாடசாலை மாணவர்கள் ஒருங்கிணைந்த கல்வியை பயிலும் வாய்ப்பை பல்கலைக்கழகம் ஏற்படுத்த முனைந்துள்ளது.
புதிய கல்வி கொள்கையின் ஒரு சிறப்பான செயல்பாடாக இந்த முயற்சி அமையும்.
பல்கலைகழக வளாகத்தில் அமையப்பெற்ற பன்னாட்டு நூலகம் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் ஒரு ஆய்வு பெட்டகமாகவும் திகழ்கிறது.
மேற்படி நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட வேத பாடசாலை மாணவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் ஏற்பாடுகளை திரு.எஸ்.வி.ஜெயராமன் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
.jpg)
.jpg)
No comments
Thank you for your comments