Breaking News

நில மேசடியில் இருவர் கைது

திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த உஷா  ராதாகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரில் தனக்கு சொந்தமான இடம் சம்பத் நகர், வேப்பம்பட்டு கிராமத்தில் DTCP நம்பர் 1417/1997 பிளாட் நம்பர்-6 ல் உள்ளது இந்த மனை 1240 சதுர அடி கொண்டது 2004-ஆம் ஆண்டு கிரயம் பெற்று அனுபவித்து வந்தேன் தனக்கு சொந்தமான இடத்தை M.K. சீனிவாசன் (53)கண்ணம்பாளையம் மேம்பாக்கம், ஆவடி மற்றும் வெங்கடேசன் (57) கண்ணம்பாளையம்ஆவடி ஆகிய இருவரும் தங்களுடைய ஆவணத்தில் திருத்தம் செய்து அந்த ஆவணத்தை கொண்டு வேப்பம்பட்டு, டன்லப் நகரில் வசிக்கும் மோகனம்பாள் கோபாலகிருஷ்ணன் மற்றும் கணேசன்  ராகன், டன்லப் நகர் ஆகியோர்களுக்கு கிரயம் செய்து கொடுத்து சுமார் 15.00.000/-பதினைந்து லட்சம் ருபாய் மதிப்புள்ள நிலத்தை நிலமோசடி செய்துள்ளார்கள் என்று 17/12/2021-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவிற்க்கு மாறுதல் செய்யப்பட்டது. 



புகாரின் மீது நிலமோசடி பிரிவு ஆய்வாளர்  ரஜீனீகாந்த் மத்திய குற்ற பிரிவு, ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் விசாரனை மேற்கொண்டார் சந்தீப் ராய் ரத்தோர், இ,கா,ப., காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் வழக்கில் உள்ள இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டதின் பெயரில் 27/12/2022-ம் தேதி குற்றவாளிகள் சீனிவாசன் மற்றும் வெங்கடேசன் இவர்களையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்ட நிலமோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர்    ரஜீனீகாந்த் மற்றும் அவர்களது தனிப்படையினரை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள்  பாராட்டினார்

No comments

Thank you for your comments