இறையருளால் வழக்குகளில் வெற்றி கிடைத்தது....காஞ்சியில் டி.ராஜேந்தர்
காஞ்சிபுரம், டிச.6-
காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை வந்திருந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் இறையருளால் எனது வழக்குகள் அனைத்தும் தூள்,தூளாக நொறுங்கிப் போய் விட்டன என்று தெரிவித்தார்.
திரைப்பட நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். நவக்கிரகங்களையும் வழிபட்டு பின்னர் ஆலயத்தில் விளக்கு ஏற்றியும் தரிசனம் செய்தார்.
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
பின்னர் ஆலய வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது..
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மருத்துவச் சிகிச்சை பெற்று மறுபிறவி எடுத்து நல்ல உடல் நலத்தோடு காஞ்சிபுரம் வந்துள்ளேன். எனது வழக்குகளில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரை தரிசிக்க ஏற்கனவே வந்திருந்தேன். இப்போது அனைத்து வழக்குகளில் வெற்றி கிடைத்து அவையனைத்தும் தூள், தூளாக நொறுங்கிப் போய் விட்டன.
எனவே மீண்டும் வந்து வழக்கறுத்தீசுவரருக்கு நன்றி சொன்னேன். இறையருளை மிஞ்சி வேறு எதுவும் இல்லை. எந்த ஒரு மனிதனுக்கும் இறைசக்தியும், காலமும், கர்மாவும்,ஜாதக கட்டமும் நல்ல முறையில் இருக்க வேண்டும். ஜாதக கட்டம் சாதகமாக அமைந்து விட்டால் வாழ்க்கையில் வெற்றியே கிடைக்கும்.
எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத எனக்கு உடல் நலம் கெட்டதற்கு காரணம் கர்மாவும்,காலமும் தான் எனலாம். மக்கள் பணத்துக்காக வாக்களித்து ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.பணநாயகம் ஒழிந்து ஜனநாயகம் மலர வேண்டும். என் மகன் சிலம்பரசனுக்கும் அதே இறைசக்தி நல்ல மனைவியை தேர்வு செய்து கொடுக்கும் என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
முன்னதாக லட்சிய திமுகவின் மாநில தலைமைக்கழக செயலாளர் துரை,துணைப் பொதுச் செயலாளர் மேகநாதன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள்,சிலம்பரசன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
படவிளக்கம்}காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த திரைப்பட நடிகரும்,இயக்குநருமான டி.ராஜேந்தர்
.jpg)

No comments
Thank you for your comments