குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம். பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான
சுதாகர்(26) த/பெ.முருகன், கீழாண்டைத்தெரு, கோவிந்தவாடி அகரம், காஞ்சிபுரம் தாலுக்கா மற்றும்
சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குபட்ட பகுதிகளில் கஞ்சா, வழிப்பறி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான
காளிதாஸ் (எ) காளி(28) த/பெ.சம்பத், பல்லவர்மேடு மேற்கு, பெரிய காஞ்சிபுரம் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க நேற்று (30.12.2022) உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments