சரக்கு ரயில் மேல் ஏறிய நபர் மீது மின்கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மேல் ஏறிய அடையாளம் தெரியாத நபர் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நாடு முழுவதும் ஏற்றி செல்ல சரக்கு ரயில் முனையம் செயல்பட்டு வருகிறது.
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
வாலாஜாபாத் சரக்கு முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மேல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏறிய நிலையில் உயர் அழுத்த மின்கம்பி உரசிய நிலையில் தீப்பிடித்து எரிய தொடங்கினார்.
திடீரென ரயில் மீது தீப்பிடித்து எரிந்த நபரைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் பதறியபடி கூக்குரல் இட்டனர்.
அதற்குள் தீ மள மளவென பரவி அடையாளம் தெரியாத நபர் உடல் முழுவதும் கருகி சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசாரும், காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து உயிரிழந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அடையாளம் தெரியாத வகையில் உயிரிழந்துள்ள நபர், மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.jpg)

No comments
Thank you for your comments