Breaking News

காஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் சமூக நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் மக்கள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சமூக நல சங்க  தலைவர் பொன்னா. வெங்கடேசன் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பணி செய்வதில் குறுக்கீடுகள் இன்னும் சரிசெய்ய படாததால் மாவட்ட ஆட்சியர் நேரடி கண்காணிப்பில் ஈடுபடுமாறு தீர்மானம் கொண்டு வரப்பட்டன. 



மேலும் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் நல திட்ட பணிகள் ஊராட்சி மன்ற தலைவர்களின் கண்காணித்து ஒப்புதல் பெற்று நிறைவு செய்ய வேண்டும் இவற்றால் ஊராட்சிகளில் சிறந்த பணிகள் நடைபெறும் என்ற தீர்மானமும், ஊராட்சிகளில் பணி அமர்த்தப்படும் குடிநீர் மின் மோட்டார் ஆப்பரேட்டர் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களின் நியமனத்தில் பணி வழங்க வேண்டும் என்றும், ஊராட்சிகளில் பணிபுரியும் செயலாளர்கள் 3 ஆண்டுகளுக்குள்ளாகவே பணியிட மாற்றம் ஊராட்சி மன்ற தலைவர்களின் ஆலோசனை பெறாமலேயே செயல்படுத்துவது ஊராட்சிகளில் பணிகள் தேக்கம் அடைவதாகவும், மக்களின் பிரச்சனைகள் உடனடி தீர்வு காண முடியவில்லை என்றும் தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் சமூக நல சங்கம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிணைந்து  மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா ஆர்த்தி இடம் மனுவாக அளித்து உடனடி தீர்வு காண  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவதினர்.

இந்நிகழ்ச்சியில் செயலாளர் எஸ் பாரத், பொருளாளர் சுமதி குமார், துணைத் தலைவர் சு.சண்முகம், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments