சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பள்ளிகளிள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வாழ்த்து
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பள்ளிகளிள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வாழ்த்து பெற்றனர்.
கல்வி அறிவியல் கலை இலக்கியம் தூய்மை சுகாதாரம் பள்ளி சூழல் உள்ளிட்ட அம்சங்களில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கப்படுகிறது.
அதன்படி இவ்வாண்டும் மாநிலம் முழுவதும் மாவட்டத்திற்கு 3 பள்ளிகளை தேர்வுசெய்து 114 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கடந்தவாரம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற விழாவில் விருதுகளை வழங்கினார்.
நம் உயிர் மூச்சு..... முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு
அவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர் ஒன்றியம் மருதம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சிறந்தப்பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட அளவில் விருதுபெற்ற பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.
இந்நிகழ்வில் தனியார் பள்ளிகளின் மாவட்டக்கல்வி அலுவலர் ஜெய்சங்கர் , காஞ்சிபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் பலராமன்,கண்ணன் உத்திரமேரூர் வட்டாரக்கல்வி அலுவலர் தண்டபாணி,அங்கம்பாக்கம் பள்ளி தலைமையாசிரியர் தணிகை அரசு,அறிவியல் ஆசிரியர் சேகர்,அங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் பாவலன், இல்லம்தேடிக்கல்வி தன்னார்வலர்கள் பார்த்தசாரதி மஞ்சுபிரியா பிரியங்கா
மருதம் பள்ளி தலைமையாசிரியர் கலைவாணி,கணித ஆசிரியை யுவராணி, இன்பவேல் உத்திரமேரூர் 1-3 வார்டு அறிவியல் ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் புலியாட்டம் கரகாட்டம் கும்மியாட்டம் போன்ற போட்டிகளில் பங்கேற்ற அங்கம்பாக்கம் பள்ளி மாணவர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

No comments
Thank you for your comments