வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு சாலை போக்குவரத்து பாதிப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை அருகே பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் மழை நீர் அதிக அளவில் செல்வதால் சாலை துண்டிப்பு
வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு சாலை போக்குவரத்து பாதிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த காற்றும் கன மழையும் கொட்டித்தீர்த்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம்,பொன்னேரிக்கரை, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழையானது வெளுத்து வாங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் 18 செண்டிமீட்டர், குன்றத்தூரில் 14 செண்டிமீட்டர், ஸ்ரீபெரும்புதூர் உத்திரமேரூர் தலா 13 செண்டிமீட்டர் செம்பரம்பாக்கம் 10செண்டிமீட்டர் என மாவட்டத்தில் 80செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக அப்பகுதிகில் சிறு பாலம் கட்டுமான பணியானது நடைபெற்று வரும் நிலையில் மழை நீர் அதிக அளவில் செல்வதால் அச் சாலையானது துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு சாலை போக்குவரத்தானது பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல கிலோ மீட்டர் தூரம் வாகன ஓட்டிகள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மழை நீர் முழுவதுமாக வடிந்த பிறகு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு தான் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.


No comments
Thank you for your comments