மருதூரில் நரிக்குறவர்களுக்கு வீடு கட்ட கணக்கெடுக்கும் பணி துவக்கம்
கோவை :
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மருதூர் ஊராட்சி உள்ளது. இங்கு 15 வார்டுகள் உள்ளது. இதில் நரிக்குறவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு 9-வது வார்டு சிவன்புரம் பகுதியில் 64 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.
இதில் 54 பேர் நறிக்குறவர்கள். அப்போது திம்மம்பாளையம்புதூர் பகுதியில் இருந்து சிவன்புரம் கிராமத்திற்கு குடியேறினர். ஆனால் இப்பகுதியில் சாலை, தெருவிளக்கு, நடைபாதை, குடியிருப்புகள் இல்லாமல் கொட்டகை அமைத்து இருந்தனர்.
இதனிடையே ஊராட்சி தலைவர் பூர்ணிமா அறிவுரங்கராஜ், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் காட்டிக்கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தார்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
இவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பின் இவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க கணக்கெடுக்கும் பணி ஊராட்சி தலைவர் பூர்ணிமாஅறிவுரங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவருடன ஊராட்சி செயலாளர் லட்சுமணன், துணைத்தலைவர் தேன்மொழி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments
Thank you for your comments