Breaking News

காஞ்சிபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் :

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற தலைப்பில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ., சார்பாக  மாவட்ட தலைவர் ஜாபர்ஷெரிப்  தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தலைவர் காலேஷ் வரவேற்புரை ஆற்றினார், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தொகுத்துறை வழங்கினார், மாவட்ட பொதுச்செயலாளர் நஸ்ரூதீன் அவர்கள் சிற்றுரையாற்றினார்.

பதவி வரும் போகும் கழகம் தான் நம் அடையாளம்...
நம் உயிர் மூச்சு.....   முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு

மேலும் இந்நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட  எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநில செயலாளர் கரீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்  பாசறை செல்வராஜ், காஞ்சி மக்கள் மன்ற தோழர் வழக்கறிஞர் மகா  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

காஞ்சிபுரம் மாவட்ட துணை தலைவர் சகாப்புதீன் நன்றியுரை ஆற்றினார். உடன் காஞ்சிபுரம் மாவட்ட துணை தலைவர் இஸ்மாயில், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வாரணவாசி  ஜாகீர் உசேன், மாவட்ட அமைப்பு செயலாளர் தாதாபீர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரஹமத்துல்லா, ஆரிப் மற்றும் தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர்  பெரும்திரளாக கலந்து கொண்டனர்.


கோயில்கள் சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல..  
ரூ.3,700 கோடி கோயில் சொத்துகள் மீட்பு.. முதல்வர் பேச்சு!

வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

No comments

Thank you for your comments