Breaking News

வேகவதி ஆற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகிய குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம்:

மாண்டஸ் புயலின் காரணமாக  காஞ்சிபுரம் வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் சூறை காற்றுடன் கூடிய அதீத கனமழை மொழியானது காணப்பட்டது.இந்த அதீத கனமழையின் காரணமாக பல்வேறு நீர்நிலைகளானது நிரம்பி வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டது.


இந்த நிலையில் இன்று காலை அதிகளவில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டு வேகவதி ஆற்றங்கரையோரமாக ஆக்கிரமிப்பாளர்கள் இருக்ககூடிய காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட தாயார்குளம் MGR நகர் கிழக்கு பகுதியில் வெள்ளமானது சூழ்ந்தது.இதனையெடுத்து தீயணையப்பு துறையினரால் அப்பகுதி மக்கள் மீட்கப்பட்டனர்.இதனையெடுத்து அப்பகுதியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தாமல் கலங்கல் வழியாக மேலும் உபரிநீரானது வெளியேற்றபடவுள்ள நிலையில் அப்பகுதியின் அருகாமையிலுள்ளவர்களை காவல்துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.அப்போது வீடுகளை விட்டு வெளியேறிய சிறுவர்கள்,சிறுமியர் கண்ணீர் விட்டு கூறிக்கொண்டு வெளியேறிய காட்சிகளும் நம்மால் பார்க்கமுடிந்தது.

அப்பகுதியிலுள்ள பொதுமக்களை வெளியேற்றிய பின்பு அப்பகுதியிலுள்ள இரண்டு சிறுபாலங்களின் ஒரு பகுதியினை துண்டித்து வெள்ளநீர் செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வெள்ளநீரானது படிப்படியாக குறைய இரண்டு ஆக கூடும் என்பதால் அதுவரை அப்பகுதிகள்  தங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு‌ அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments

Thank you for your comments