பெண்ணாடத்தில் நடிகர் ரஜினிகாந்த் 73 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் நடிகர் ரஜினிகாந்த் 73 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நல்லூர் ஒன்றியம் மற்றும் பெண்ணாடம் பேரூராட்சி ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் விழா கொண்டாடப்பட்டது தலைமை, D. ரஜினி ரவி நல்லூர் ஒன்றிய செயலாளர், சிறப்பு அழைப்பாளர்கள், S. ரவி மாவட்ட செயலாளர், kdb. பிரபாகர் மாவட்ட துணை செயலாளர், முன்னிலை,RK. செல்வமணி ஒன்றிய இணை செயலாளர்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
பெண்ணாடம் சுமைதாங்கி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் பேரணியாக பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகம் வரை சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மாளிகைக் கோட்டத்தில் உள்ள எழுச்சி தளிர், அறிவுசார் குறைபாடு உடையோருக்கான உண்டு உறைவிட சிறப்பு பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரஜினி ரவி அவர்கள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து எழுச்சி தளிர் பள்ளியின் மாணவர்கள் ரஜினிகாந்த் பாடலுக்கு நடனம் ஆடி அங்கிருந்த ரசிகர்களை மகிழ்வித்தனர்.


No comments
Thank you for your comments