வேப்பூரில் சாலையோரமாக இருந்த 50 பனைமரங்கள் வெட்டப்பட்டதால் பரபரப்பு போலீசார் விசாரண
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் - சேலம் சாலையோரம் காப்புகாட்டு பகுதிக்கு எதிராக 2 கி.மீ. தூரத்திற்கு நீர்நிலை ஓடையில் கரையில் பனைமரங்கள் வளர்ந்துள்ளது.
இதில் ரிச் சிட்டி மனைப்பிரிவு முன் நேற்று காலை 9 மணிமுதல் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பனை மரங்கள் வெட்டி வாகனங்களில் ஏற்றும் பணி நடந்தது.
இதனையறிந்த வேப்பூர் துணை வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் வேப்பூர் போலீசார் பகல் 2.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தனர். பனைமரங்களை வெட்டி கொண்டிருந்த மர்மநபர்கள் வருவாய் துறையினர் பார்த்து தப்பி ஓடினர்.
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
தகவலறிந்து வந்த திட்டக்குடி டி.எஸ்.பி. காவ்யா சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டனர் இதில் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டி விற்க முயன்றது தெரியவந்தது. மேலும் பனை மரங்கள் வெட்ட பயன்படுத்திய ஜே.சி.பி. இயந்திரம், லாரி, மரம் வெட்டும் இயந்திரங்களை பறிமுதல் செய்ய டி.எஸ்.பி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் பனை மரங்கள் வெட்ட பயன்படுத்திய ஜே.சி.பி. இயந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வருவாய் துறையினர் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

No comments
Thank you for your comments