புகையிலை பொருட்களைக் காரில் கடத்தி சென்ற வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது
விருத்தாசலம் அருகே பெங்களூரில் இருந்து, வடலூருக்கு காரில் 3750 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக், காரில் கடத்தி சென்ற வடமாநில இளைஞர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பொன்னாலகரம் சுங்கச்சாவடியில், நெய்வேலி காவல் உதவி ஆய்வாளர் அழகிரி தலைமையில் அடங்கிய குழுவினர், சோதனை மேற்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த, காரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, 40 மூட்டைகளில், 3750 கிலோ புகையிலை மற்றும் பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதைக் கண்டு, காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
பின்னர் காரில் வந்த இரண்டு இளைஞர்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்து ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, சங்கர் ராம் (வயது 34), லக்குமாராம் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து, 16 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருட்களையும், 24 மூட்டைகளில், பான் மசாலாவையும், வடலூருக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து ஊமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

No comments
Thank you for your comments