Breaking News

தேவரியம்பாக்கம் கிராமத்தில் மழை பாதிப்பு பகுதியில் இருந்து ஐந்து இருளர் இன குடும்பத்தை சேர்ந்த 24 பேர் மீட்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் ஐந்து இருளர் குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் மழை பாதிப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் தேவரியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.


தேவரியம்பாக்கம் மடுவு என்று அழைக்கப்படும் மிகப்பெரிய கால்வாய் கரைக்கு எதிர் புறத்தில்  ஆபத்தான நீர் பிடிப்பு பகுதியில்  வசித்து வந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த விளிம்பு நிலை மக்களான இருளர்  மக்கள் 24 நபர்கள்களை ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் நேரில் சந்தித்து பேசி அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து வர மறுத்தவர்களுக்கு உரிய விளக்கங்களை கொடுத்து மாண்டஸ் புயலினுடைய தாக்குதல் தீவிரத்தை உணர வைத்து அங்கிருந்த 24 நபர்களை வெளியில் வரவழைத்து பாதுகாப்பாக அரசு தொடக்கப் பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு இருக்க இடமும் உண்ண உணவும் ஏற்பாடு செய்தார்.

இந்நிகழ்வில் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்து சுந்தரம் ராஜ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊராட்சி செயலர்  கிராம பிரமுகர் ஆட்டோ வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்

பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடம் வழங்கியதற்கு ஊராட்சி மன்ற தலைவரை விளிம்பு நிலை மக்கள் மனம் வந்து   பாராட்டினர்.

No comments

Thank you for your comments