அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் ரூ.1200 கோடி ஒதுக்கீடு.. அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் 559 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.44.91 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இன்று (30.12.2022) மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் 559 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.44.91 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு
மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
எவ்வளவு அலச்சியப்படுத்தப்பட்டு அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமான கொள்கையும் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், ஒளியில் தான் நமது நிழலின் வடிவம் நமக்கு தெரிகிறது. சோதனையின் போது தான் நமது நெஞ்சின் வலிமை நமக்கு தெரிகிறது என்று முன்னாள் கலைஞர் கருணாநிதி அவர்களும் கூறியுள்ளனர். இவைகளை இயற்கையிலேயே பெற்றவர்கள் நம்முடைய தாய்மார்கள்.
நம் சமுதாயத்தில் ஆண்களை போல பெண்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக முன்னாள் கலைஞர் கருணாநிதி அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவி குழு திட்டத்தை தொடங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2022-2023 ஆண்டிற்கு வங்கிக் கடன் உதவி ரூ.500 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்றைய விழாவில் வழங்கப்பட்ட வங்கி கடன் உதவியும் சேர்த்து 5,884 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மொதம்ம் ரூ.324 கோடி 91 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 21 ஆயிரத்து 392 கோடி 52 இலட்சம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 4 இலட்சத்து 8 ஆயிரத்து 740 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயன் அடைந்துள்ளனர். 2022-2023 இல் ரூ 25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14 ஆயிரத்து 120 கோடியே 44 லட்சம் வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.2,674 கடன்களை தள்ளுபடி செய்தார், இதில் 15 இலட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயனடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,559 சுய உதவி குழுக்களில் உள்ள 16,474 உறுப்பினர்களின் 37.75 கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாம் பெண்களுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தி அந்த திட்டங்கள் மூலம் பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்களுக்கான சொத்தில் சம உரிமை பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தால் நாள் ஒன்றுக்கு 40 இலட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர். உயர் கல்விக்கற்பதற்கு மாணவியர்களக்கு மாதந்தோறும் ரூ.1000, அரசு பணிகளில் மகளிருக்கு 40 சதவீதம் இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அரசு பெண் ஊழியருக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களில் உயர்வு, திருக்கோயில்களில் ஒதுவார்கள் நியமனம், அரசு பெண் ஊழியர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் விடுதிகள், அனைத்து மாவட்டங்களிலும் கருவுற்ற தாய்மார்களுக்கு சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் பெண்கள் பெயரில் வழங்க ஆணை, அங்கன்வாடி மையங்களில் மணி புரியும் பெண் ஊழியர்களின் வயது 60 ஆக உயர்வு ஆகிய சாதனைகள் மகளிருக்கு நிறைவேற்றி வருகிறது.
மேலும், மருத்துவப்படிப்பகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிறபட்ட OBC பிரிவினருக்க 27 சதவீத இட ஒதுக்கீடு, உயர் தொழிற் பட்டப்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேல்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவும்,
ஊரக வளர்ச்சி துறை சார்பில் நமக்கு நாமே திட்டம் ரூ.300 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆண்டுக்கு 20 சதவீதம் கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு ஊராட்சிக்கு ரூ.30 லட்சம் அடிப்படை நிதியும், ரூ.5 இலட்சம் ஊக்க நிதியும் அளிக்கப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு உத்தமர் காந்தி விருது பரிசுத்தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெறுவதற்கும், அரசின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திட 600 ஊராட்சிகளிலும் ரூ.40 இலட்சம் செலவில் கிராம செயலாக்க கட்டிடங்கள் செயல்படுத்தி வருகின்றன.
இது மட்டுமில்லாமல் விவசாயிகளை பேணிகாக்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரத்து 531 கோடி மதிப்பிலான பயிர் கடன் தள்ளுபடியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 453 விவசாயிகளுக்கு ரூ89 கோடியே 41 லட்சம் மதிப்பிலான பயிர்கடன் தள்ளுபடியும் செய்யப்பட்டு வந்துள்ளன.
மிழகம் முழுவதும் ரூ.14 இலட்சத்து 60 ஆயிரம் ஏழை எளிய மக்கள் வாங்கி ரூ.5 ஆயிரத்து 250 கோடி நகைக்கடன் தள்ளுபடியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 15 ஏழை எளிய மக்களுக்கு, ரூ.60 கோடியே 45 லட்சம் மதிப்பிலான நகைகடன் தள்ளுபடியும் செய்யப்பட்டு வந்துள்ளன.
அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தமிழகத்தை இந்தியாவிலேயெ முதன்மை மாநிலமாக கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை திரு.ஆ.மனோகரன், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.ஹேமலதா ஞானசேகர், உத்திரமேரூர் ஒன்றியக் குழு துணைத்தலைவர் திருமதி. வசந்தி குமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments