Breaking News

பிள்ளைப்பாக்கத்தில் வடமாநில பெண்கள் உட்பட 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

பிள்ளைப்பாக்கத்தில் வடமாநில பெண்கள் உட்பட 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா, ஊராட்சி மன்ற தலைவர் கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார். 




காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளைப்பாக்கத்தில் வல்லக்கோட்டை பகுதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறை சார்பில்  மாகானியம், கொளத்தூர், நாவலூர், வெள்ளரை, அழகூர், கே.கே. நகர், வெங்காடு, இரும்பேடு  போன்ற பகுதியில் இருந்து  தொழிற்சாலை பகுதியில் வசிக்கும் வட மாநில பெண்கள்  உட்பட 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது 

இவ்விழாவிற்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி கண்காணிப்பாளர் கோமதி, மேற்பார்வையாளர் சிறியபுஷ்பம் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பிள்ளைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி வெங்கடேசன் துணை தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி 100 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, பூ, பழம்,தேங்காய் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி கர்ப்பிணிகளை வாழ்த்தினர்

இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உள்ளாட்சி பிரிதிநிதிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம் 

No comments

Thank you for your comments