Breaking News

ஆவடியில் சாலைகளில் தேங்கும் மழை நீரால் தடுமாறும் வாகன ஓட்டிகள்.. அபாயம் நிலை...

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் உள்ள சாலைகள் குண்டும் குழியமாக காட்சியளிக்கிறது. இதனை சரி செய்யாததால் ஒரு நாள் பெய்த மழைக்கு சாலைகளில் நீர் குளம் போல் தேங்கி நிற்கும் அவலம் நீடிக்கிறது.

ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இது நாள் வரை சாலைகள் முழுமையாக போட்டு முடிக்கப்படாத காரணத்தினால் ஒரு நாள் பெய்த மழைக்கு சாலைகளில் நீர் ஆறுகள் போல் பெருகெடுத்து ஓடிகின்றது.



இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக போர்க்கால அடிப்படையில் சாலைகளை சரி செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வலுக்கின்றது. 

அது மட்டும் அல்லாமல் கடந்த மே மாதம் பெய்த மழையில் ஆவடி மழையில் தத்தளித்ததால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  ஆய்வினை மேற்கொண்டார்.

இதற்கு காரணம் மழை நீர் கால்வாய் சரியாக கட்டப்படாதது என்று தெரிவித்த நிலையில் தற்போது மழை நீர் கால்வாய் புதியதாக கட்டப்பட்டு வருகிறது 

இருப்பினும் இந்த கால்வாயில் மத்தியில் போர்வெல் மற்றும் மின்கம்பங்கள் இருப்பதால் மழை நீர் செல்ல வழி இல்லாமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.  முறையாக ஆய்வு செய்து இதனை சரி செய்து மழை நீர் கால்வாய்யை சரியாக கட்ட வேண்டும் எனவும் சாலைகளை சீர் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

விரைவில் இந்த பணிகள் நடைபெறுமா? பொதுமக்கள் கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

No comments

Thank you for your comments