Breaking News

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா துவக்கி வைத்தார்.





காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் காஞ்சிபுரத்தில் மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுதல் மற்றும் போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இவ்விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்,போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியானது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி மேட்டு தெரு,காமராஜர் சாலை,மூங்கில் மண்டபம்,பேருந்து நிலையம் உள்ளிட்ட காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கத்தில் நிறைவடைந்தது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி,தாசில்தார் பிரகாஷ்,காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments