நாளை... பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் நாளை (02.11.2022) புதன்கிழமை காலை 10.15 மணியளவில்
(1) வர்ஷினி இல்லம் அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கு சிகிச்சை (Therapy) வழங்கும் “விதை” திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைகளின் வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்க, நடமாடும் பேருந்திற்கான சாவியினை வழங்குகிறார்.
(2) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள உண்டு உரைவிடப் பள்ளிகள், மதுரை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடங்கள், நாகப்பட்டினம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கல்லூரி விடுதிக் கட்டடங்கள், ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
(3) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான விடுதிக் கட்டடங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள், செங்கல்பட்டு, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை திறந்து வைக்கிறார்.
(4) தமிழ்நாடு அரசின் சார்பில் நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நிர்வாகிகளிடம் வழங்குகிறார்.

No comments
Thank you for your comments