காலசக்கரம் செய்தி எதிரொலி.. உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட அமைச்சர்கள் கே என் நேரு, சாமு நாசர், இயக்குநர் பொன்னையா..
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் கால்வாய் கட்டும் பணியில் முறைகேடு என்று அக்டோபர் 13ஆம் தேதி செய்தி ஒன்று வெளியிட்டு இருந்தோம்.. அதன் பிறகு நவம்பர் 2ஆம் தேதி ஆவடியில் சாலைகள் தேங்கும் மழைநீரால் தடுமாறும் வாகன ஓட்டிகள் அபாய நிலை என்று செய்தி வெளியிடப்பட்டது.
பின்னர் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள் இதுபோல் ஆவடி மாநகராட்சியில் தொடர்ந்து எந்த ஒரு பணியும் நடைபெறாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக காலச்சக்கரம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக நவம்பர் 4ம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் இவர்களுடன் நிர்வாக இயக்குநர் பொன்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் பணிகளை விரைந்து முடிப்பதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்
விரைவில் முடிக்கப்படுமா பொறுத்திருந்து பார்ப்போம்...
🔥Also Read தொடர்புடைய செய்திக
👉 உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பங்கள்-பீதியில் பொதுமக்கள்
👉 ஆவடி மாநகராட்சியில் அவலம்... சாலையில் தேங்கும் மழை நீரால் தடுமாறும் வாகன ஓட்டிகள்!


No comments
Thank you for your comments