Breaking News

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின் கம்பங்கள்-பீதியில் பொதுமக்கள்

ஆவடி :

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 50  மின்கம்பங்களுக்கும் மேல் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. மழைகாலம் என்பதால் இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதிகளில் சுமார் 50  மின்கம்பங்களுக்கும் மேல் சிதிலமடைந்து எலும்பு கூடுகலாக நிற்கின்றது. 



இதற்கு முழு காரணம் மழை நீர் கால்வாயின் நடுவிலே மின்கம்பம் இருப்பதினாலும், மழைநீர் கால்வாயில் தேங்கி நிற்கும் தண்ணீரால் துருப்பிடித்து மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட்  வெடித்து கொட்டுகிறது. 

ஆட்கள் தேவை!

காலச்சக்கரம் நாளிதழுக்கு!
செய்தி மற்றும் விளம்பரம் சேகரிக்க துடிப்பு மிக்க செய்தியாளர்கள், விளம்பர பிரதிநிதிகள் மாவட்டம் மற்றும் தாலுக்கா வாரியாக தமிழகம் முழுவதும் உடனே தேவை. சிறிய அளவில் முதலீடு செய்து நாளிதழை அவர்தம் நேரடி பொறுப்பில் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்ய விரும்பும் முகவர்களும் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடன் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளவும்.           Advt.,

தொடர்புக்கு - 9360005566

இந்நிலையில் தற்போது  மழைக்காலம் என்பதால் இந்த கம்பங்கள் எளிதில் விழ வாய்ப்புள்து. மின் கம்பங்கள்  சாய்ந்து விழுந்தால் பல உயரிழப்புகள் நேரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை... இதனால் உயிர்பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். 


 எனவே விபரீதம் ஏற்படும் முன் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 கடந்த ஆட்சி காலத்தில் மழை நீர் கால்வாயில் மின்கம்பங்கள் இருப்பதினால் தண்ணீர் போக வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் தண்ணீரில் மிதந்தனர். தற்பொழுது நடைபெற்று  வரும் மழை நீர் கால்வாய் பணியும் இதே நிலைமைதான் நீடித்து வருகிறது. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை...  இதனை உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து மின்கம்பங்களையும் போர்வெல் போன்றவற்றை அகற்றி மழை நீரை தடையின்றி செல்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். துறைசார்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..? வழக்கம் போல வேடிக்கை பார்ப்பார்களா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...


No comments

Thank you for your comments