பள்ளிக் கல்வித் துறை மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறை மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் மாவட்டத்தில் 140 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
இதன் முதற்கட்டமாக காஞ்சிபுரம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, காதுகேட்கும் கருவி, Rolater, CP நாற்காலி, MSIED Kit, Sum of Elbow Crutchers, Fabrication devices போன்ற ALIMCO உதவி உபகரணங்கள் ரூ.4.33 இலட்சம் மதிப்பில், 23 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.வெ.வெற்றிச்செல்வி, ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments