Breaking News

டெல்லியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய மேலூர் வீராங்கனைக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

  • டெல்லியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய மேலூர் வீராங்கனைக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு 
  • ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு என வீராங்கனை வர்ஷிணி ராஜபாண்டி பேட்டி  

கால் குத்துச்சண்டையில் தங்கம் வென்று ஊர் திரும்பிய, வீராங்கனை வர்ஷிணி ராஜபாண்டி,க்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி-கவிதா  தம்பதியரின் மகள் வர்ஷிணி ராஜபாண்டி, கால் குத்து சண்டை வீராங்கனையான இவர் டெல்லி டால்ஹோ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச கால் குத்து சண்டை போட்டியில் பங்கேற்று  மூன்றாவது சுற்றிலேயே ஷோர்டான் வீராங்கனையை தோற்கடித்து தங்கம் வென்று இமாலய சாதனை படைத்துள்ளார். 



வெற்றி மகிழ்ச்சியோடு ஊர் திரும்பிய வீராங்கனை வர்ஷிணி ராஜபாண்டி,க்கு  அவரது சொந்த ஊரான வெள்ளரிப்பட்டியில் கிராம மக்கள் திரண்டு வந்து  உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக ஊரின் அருகாமையில் உள்ள சுங்க சாவடி பகுதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க வான வெடிகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.. வழிநெடுக பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வர்ஷிணிக்கு கை குழுக்கியும் மலர் மாலைகள் அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், 

தாய் தந்தை மற்றும் சகோதரன் உள்ளிட்ட தமது குடும்பத்தினரோடு வீராங்கனை வர்ஷிணி ராஜபாண்டி


விவசாய குடும்பத்தை சேர்ந்த தான் அரசு பள்ளியில் படித்த மாணவி எனவும், பள்ளியில் படிக்கும் போதே படிப்போடு விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வந்ததாகவும், குறிப்பாக குத்துச் சண்டையில் தொடங்கி தற்போது மதுரை மீனாட்சி கல்லூரியில் படித்து வரும் தான் கிக் பாக்சிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி பெற்றதாகவும், தற்போது டெல்லியில் நடைபெற்ற சர்வ தேச கிக் பாக்சிங் போட்டி யில் சிங்கப்பூர், கொரியா, சிக்கிம்,ஜோர்டான், என பல மாநில வீரர்கள் போட்டியிட்ட நிலையில் சிக்கிம், சிங்கப்பூர், ஜோர்டான் வீர்களோடு மூன்று சுற்றுகள் போட்டியிட்டு இறுதியாக ஜோர்டான் வீராங்கனையை தோற்கடித்து தான் தங்கம் வென்றுள்ளதாகவும் தெரிவித்த வர்ஷிணி தங்கம் வென்றதை விட தமது கிராமத்தில் தமக்கு கிராம பொதுமக்கள் அளித்துள்ள மிகப் பெரிய வரவேற்பு தமக்கு மிகுந்த மகிழ்ச்சி யையும்,கூடுதலான உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் நகரப் பகுதியை போல  கிராம பகுதிகளை சேர்ந்த மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன் வருவதில்லை எனவும் தங்களது குழந்தை களின் திறமையை தெரிந்து கொண்டு அதை வெளிக் கொண்டு வர பெற்றோர்கள் ஒத்து ழைப்பு வழங்க வேண்டும்.

அப்போதுதான் என்னைப் போன்று அவர்களும் சாதனை மாணவிகளாக திகழ முடியும் எனவும், சர்வ தேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க பொருளாதாரமும் முக்கிய தேவையாக உள்ளது.

எனக்கு கிராம பெரியவர்களின் மேலான ஒத்துழைப்போடு டிவிஎஸ் என்ற தனியார்  நிறுவனம் உதவி செய்தது,ஆகவே தமிழக அரசு பண உதவி செய்து என்னைப் போன்ற வீராங்கனைகள் சாதனை படைக்க உதவி செய்ய வேண்டும்,

2028 ல் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்பதே தமது லட்சிய கனவாகும், இவ்வாறு வீராங்கனை வர்ஷிணி ராஜபாண்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments