Breaking News

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், படப்பை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெற்ற தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாமினை  மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன்., அவர்கள் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து, படப்பை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,  மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு  ஆகியோர் தொடங்கி வைத்து, முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.



படித்து அரசு வேலை பெறும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,03,627 பேர் வேலைவாய்ப்பு வேண்டி,  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். படித்து வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு, அரசு வேலை பெறுவதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள்தோறும் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள், எளிதாக வேலை பெறும் நோக்கில் திறன் மேம்படுத்தும் கட்டணமில்லா பயிற்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்று தரும் நோக்கில், தனியார் நிறுவனங்களை அழைத்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திட வேலைவாய்ப்பு துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படித்த வேலைவாய்ப்பற்றிருக்கும்  இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மூன்றாண்டுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 2,000-க்கு அதிகமான படித்து முடித்த இளைஞர்கள்  நமது மாவட்டத்தில்  தற்பொழுது  உதவித்தொகை பெற்று வருகின்றனர். இதுவரை நமது மாவட்டத்தில் நடைபெற்ற 13 சிறிய மற்றும் பெரும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஏறக்குறைய 955 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இம்முகாமில் கலந்துகொண்ட படித்த வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கிய மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, படித்த வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற   ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்சாலை பிரதிநிதிகளை அழைத்து, வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, படித்த வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படுகின்றன.

படித்த வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் இதுவரை 66 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 1,04,000 நபர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் எல்லா தொகுதிகளிலும் நடைபெற இருக்கின்றன. ஆண்டிற்கு ஒரு இலட்சம் நபர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் அளவிற்கு இந்த பணியானது தொடர்ந்து நடைபெறும். இந்த வேலைவாய்ப்பு முகாம் நமது மாவட்டத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் எனவும் படித்த இளைஞர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறும், மேலும், படித்த  வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கு மாவட்ட  தொழிற்மையம் மூலமாகவும், அரசின்  மூலமாகவும் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு  ஆலோசனைகளும் மற்றும் கடன் உதவிகளும் தருகின்றன. இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி, படித்த இளைஞர்கள் தொழில் நிறுவனங்கள் உருவாக்கி, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் அளவிற்கு உங்களை முன்னேற்றி கொள்ளவேண்டும் என கேட்டு கொண்டார். 

இம்முகாமில் 84 தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டது. சுமார் 3000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 800 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஊராட்சிதலைவர் படப்பை.  திரு.ஆ.மனோகரன், ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன், வேலைவாய்ப்பு துணை இயக்குநர் திரு.அருணகிரி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபரம் மாவட்டம்.



No comments

Thank you for your comments