Breaking News

சார் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மஞ்சள் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு

 விருத்தாசலம்

விருத்தாசலம் சார் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மஞ்சள் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடலூர் ரோட்டில் சார் ஆட்சியர் அலுவலகம் உள்ளது, அந்த அலுவலகம் அருகிலேயே சார் ஆட்சியர் முகாம் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று காலை சார் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கார் ஸ்டாண்டில் பாம்பு ஒன்று நடமாடி கொண்டிருப்பதாக விருத்தாசலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.


தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரி மணிகண்டன், சம்பத்குமார் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சார் ஆட்சியர் இல்லத்தில் சுற்றி கொண்டிருந்த பாம்பை, பாம்பு பிடிக்கும் கருவிக்கொண்டு லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பு மஞ்சள் சாரை வகை பாம்பு என கூறப்பட்டது.  பின்னர் பிடிபட்ட பாம்பு காப்புக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.


No comments

Thank you for your comments