Breaking News

சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

விருதாச்சலத்தில் வக்பு வாரிய பரிந்துரையை புறக்கணிப்பு செய்ய கோரியும், சட்டப்படி கிரயம் பெற்ற சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க கோரி, பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம்,  நூற்றுக்கு மேற்பட்ட சர்வே நம்பரில் உள்ள சொத்துக்களை, விற்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மெண்ட் எழுதவோ முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டது. 

மேலும் அறிவிப்பு செய்யப்பட்ட,  சொத்துக்கள் அனைத்தும் வக்பு வாரியத்திற்கு, சொந்தமான சொத்துக்கள் என்றும், யாரும் உரிமை கூற முடியாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாச்சலம் சார்பதிவாளர் அலுவலகம்  முன்பு, அனைத்து சமுதாய பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அவர்களுக்கு ஆதரவாக நகர வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் என சுமார் 500க்கும் மேற்பார்ட்டோர், வக்பு வாரிய பரிந்துரையை புறக்கணிக்க கோரியும், சட்டப்படி கிரையம் பெற்ற சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்


மேலும் விருத்தாச்சலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வக்பு வாரிய சொத்து என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும், ஷேக்பத்தாசாகிபு வாரிசுகள் மூலம் விற்பனை கிரையம் பெற்ற சொத்துக்கள் என்றும், 42 ஆண்டுகளாக சட்டப்படி சார் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் பார்த்த பிறகு, ரிஜிஸ்டர் கட்டணம், ஸ்டாம் கட்டணம் என அரசுக்கு செலுத்தி வருவாய்த்துறையில் பட்டா மாற்றம் செய்து அனுபவித்து வருகின்ற நிலையில், அந்த சொத்துக்கள் 1935 ஆம் ஆண்டு, கடலூர் சாலையில் உள்ள பள்ளிவாசலின் மேம்பாட்டிற்காக எழுதி வைத்த சொத்துக்கள் என கூறும் சார் பதிவாளர்கள் தான் முதல் குற்றவாளி என கண்டன உரையாற்றினர். 

மேலும் வருவாய்த்துறை ஆவணங்களில் வக்போர்டு சொத்து என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், உடனடியாக தமிழக அரசு வகுப்பு வாரியா பரிந்துரையை புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்றும், சட்டப்படி கிரையம் பெற்ற சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்

இதனை அறிந்தவிருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி போராட்டம் நடைபெறும் இடத்திற்க்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

No comments

Thank you for your comments