தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், சென்னை அவர்களின் உத்தரவுப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநர், சென்னை (பொ) அவர்களின் தலைமையில் சிறப்பு பறக்கும் படை (23.11.2022) திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது தகவல் பலகை வைப்பது, இருப்புப் புத்தகம் பராமரிப்பது முளைப்பு திறன் சான்று வைத்திருப்பது, இரசீது வழங்குவது போன்ற ஆவணங்கள் விதை சட்டம் 1966ன்படியும், விதை விதிகள் 1968 ன்படியும் உள்ளனவா என சரிபார்க்கப்பட்டது.
ஆய்வின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள 7.350 மெ.டன். நெல் விதைகள் மற்றும் காய்கறி விதைகள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.428 லட்சம் ஆகும். ஆய்வின்போது உரிய இரசீது விவசாயிகளுக்கு வழங்காத கடைகளுக்கு விளக்கக் கடிதம் அனுப்பி விளக்கம் கேட்க்கப்பட்டுள்ளது.
மேலும், முளைப்புத் திறன் அற்ற விதைகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர்களின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர், சென்னை (பொ) தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments