Breaking News

செய்தி துறையினருக்கான அறை திறப்பு... அமைச்சர் சு.முத்துசாமியுடன் குழுபுகைப்படம் எடுத்துக்கொண்ட செய்தியாளர்கள்... புகைப்படக்காரர்கள்...

 ஈரோடு மாநகராட்சி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலக முகப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கான அறையினை திறந்து வைத்து, பார்வையிட்டதைத் தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுடன் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் குழுபுகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் ஈரோடு மாநகராட்சி மரியாதைக்குரிய துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) மாதேஸ்வரன், ஈரோடு மாநகராட்சி மண்டலம் 3 தலைவர் சசிகுமார், உதவி ஆணையர்கள் விஜயகுமார், விஜயா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், ஊடகத்துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments