கல் குவாரியை புதிய நீர் தேக்கமாக மாற்றுவது குறித்து அமைச்சர்கள் நேரில் ஆய்வு
இன்று (06.11.2022) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், சிக்கராயபுரம் கல் குவாரியை புதிய நீர் தேக்கமாக மாற்றுவது குறித்து மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
செம்பரபாக்கம் ஏரியிலிருந்து வரும் உபரி நீரினை இக்குவாரிக்கும் கொண்டு வந்து பெரிய நீர்தேக்கமாக மாற்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது குறித்து மாண்புமிகு அமைச்சர்கள் பொதுப்பணி துறை பொறியாளகளிடம் ஆலோசனை நடத்தினார்கள்.
இதனை அடுத்து மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் கூறியதாவது:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் மழை நீரை தேக்கி வைக்கும் பெரிய ஏரியை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார் அதன் அடிப்படையில் இக்குவாரி 130 ஏக்கர் அரசு நிலத்திலும், 80 ஏக்கர் தனியார் நிலத்திலும் உள்ளது. தனியார் நிலத்திலுள்ள 80 ஏக்கரை உரிய அனுமதி பெற்று, 210 ஏக்கரில் புதிய நீர்தோக்கமாக மாற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்நீர் தேக்கத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இவ் ஆய்வின்போது சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.கிருலோஷ்குமார், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், சென்னை குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் திரு.ஜெயகர், குன்றத்தூர் நகராட்சி தலைவர் திரு.சத்தியமூர்த்தி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு.அருண்மொழி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.




No comments
Thank you for your comments